மிழகத்தில் நடைபெற்றுவரும் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் பல வெடிகுண்டுகள் வெடித்து வருகின்றன. டி.டி.வி.தினகரன் மீது இருக்கும் அந்நியச் செலாவணி மோசடி வழக்கு வருகிற 25ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் வருகிறது. இவ்வளவு சைலண்ட்டாக இருந்த வழக்கு, திடீரென சுப்ரீம் கோர்ட்டில் வருவதற்கு என்ன காரணம் என யோசித்த டி.டி.வி.தினகரன், அதுபற்றி பா.ஜ.க. தரப்பிடம் பேச, "நீங்கதான் த.வெ.க. கூட்டணிக்கு செல்வதாக சொல்லிவிட்டீர்களே? நாங்கள் இந்த வழக்கு பற்றி இனி என்ன செய்ய முடியும்?' என பா.ஜ.க.வினர் கைவிரித்துவிட்டார்கள்.

Advertisment

வழக்கில் இன்னும் இரண்டு முறை விசாரணை நடந்தால் டி.டி.வி.தினகரன் சிறையில் அடைக்கப்படுவார். 96 முதல் நடந்துவரும் வழக்கு, இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்தால், இந்த அந்நியச் செலாவணி மோசடி வழக்கிலும், இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கிலும் சிறைக்கு செல்வது உறுதி என பா.ஜ.க. தெரிவித்தது.

Advertisment

டி.டி.வி.யின் வீரம் எல்லாம் அத்துடன் சுருங்கிப்போனது. பா.ஜ.க. கூட்டணிக்கு அவர் சம்மதித்தார். ஆனால் ஒரு டெக்னிக்கல் டிமாண்டை அவர் வைத்தார். என்னை ராஜ்யசபா உறுப்பினராக்குங்கள். எனக்கு மந்திரி பதவி கொடுங்கள் என்பதுதான் அவரது டிமாண்ட். அதை பிறகு பார்க்கலாம் என பியூஷ்கோயல் பேசி முடிக்க, டி.டி.வி. கூட்டணிக்குள் வந்தார்.

ஓ.பி.எஸ். பக்கம் இருந்த வைத்திலிங்கம், தி.மு.க. பக்கம் சென்றுவிட்டார். ஓ.பி.எஸ். மட்டும் அதில் சேர மறுக்கிறார். அவருக்கு ஊக்கமளிப்பது சசிகலா. "நாம் த.வெ.க. செல்வோம் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. கூட்டணியில் சேர வேண்டாம்' என்பது சசிகலாவின் தற்போதைய நிலை. ஆனால் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத், "நான் பா.ஜ.க. அணியில் சேர விரும்புகிறேன்' என தனியாக காரில் வந்து, பியூஷ்கோயலிடம் பேசியிருக்கிறார். அதற்கு ஒரு காரணமிருக்கிறது. ரவீந்திரநாத் மீது மட்டும் 47 வழக்குகளை பா.ஜ.க. பதிவு செய்துள்ளது. அதில் ஒன்று, மாலத் தீவுகளுக்கு ப்ளைட்டில் ஓ.பி.எஸ். முதல்வராக இருக்கும்போது, பணம் கொண்டு போன வழக்கு. அப்பொழுது இன்டர்போல் சர்வதேச போலீசில் சிக்கிய ரவீந்திரநாத் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. 

Advertisment

NDA1

அதேபோல், துபாயில் ஏடாகூடமாக துபாய் போலீஸில் சிக்கிய வழக்கு ஒன்றும் உள்ளது. இந்த வழக்குகளை காரணம் காட்டி, பா.ஜ.க. ஓ.பி.எஸ்.ஸை மிரட்டிவருகிறது. 

அதனால் ஓ.பி.எஸ். மகனிடம் நீ வேண்டு மென்றாலும் தனியாக போய் பா.ஜ.க.வில் சேர்ந்துகொள் என்று கூறிவிட்டார். மகன் பா.ஜ.க.வில், ஆதரவாளர்கள் தி.மு.க.வில், இவர் த.வெ.க.வில் என மூன்று பக்கம் ஸ்கெட்ச் போட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். 

இவர் அ.தி.மு.க.வில் சேர்வதற்கு எடப்பாடி வாய்ப்பு கொடுத்தார். அவருக்காக அவைத் தலை வர் பதவியும் காத்திருந்தது. அதேபோல் செங்கோட் டையனுக்காக துணை பொதுச்செயலாளர் பதவி யும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இருவரும் பா.ஜ.க. தங்களை ஆதரிக் கும் என நம்பியிருந்தார்கள். ஓ.பி.எஸ். பொதுச் செயலாளர் பதவியை பா.ஜ.க. தனக்கு பெற்றுத் தரும் என நம்பினார். செங்கோட்டையன் முதல்வர் வேட்பாளராக வருவதை எதிர்பார்த்தார். இரண்டுபேரையும் பா.ஜ.க. நட்டாற்றில் விட்டுவிட்டது.  சசிகலாவோடு சேர்ந்து த.வெ.க.வுக்குச் செல்ல ஓ.பி.எஸ். தற்போதுதான் பேசிவருகிறார். ஆனால் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்தோ, முன்பே த.வெ.க.விடம் டீ-ங் பேசத் தொடங்கிவிட்டார். அதேபோல் சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டு அவருக்கு பொதுச்செயலாளர் பதவி வாங்கிக் கொடுப்போம் என பா.ஜ.க. சொன்னதும் நடக்கவில்லை. இப்படி விரக்தியடைந்த அனைவரும் வெவ்வேறு ஆப்ஷன்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். த.வெ.க. பக்கம் போகத் தயாராகிவருகிறார்கள். 

சசிகலா மீது ரூபா என்கிற கர்நாடக காவல்துறை அதிகாரி சசி சிறையில் இருக் கும்போது சிறைத்துறை டி.ஜி.பி. ஒருவருக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தார் என ஒரு புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரை அமலாக்கத்துறை எடுத்து விசாரித்து "சசியை மீண்டும் சிறையில் அடைப்போம். அவரது சொத்துக்கள் மீது கைவைப்போம்' என பா.ஜ.க. மிரட்டிவருகிறது.

ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வுக்குள் வந்திருந்தால் அவரது கோட்டாவாக 10 தொகுதிகள் கொடுத்திருப்பார்கள். அவரது ஆதரவாளர்களை  இரட்டை இலையில் நிற்க வைத்திருக்கலாம். இப்பொழுது அந்த வாய்ப்பும் பறிபோனது என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

டாக்டர் ராமதாசுக்கு, அமித்சா ஆபீஸிலிருந்து நேரடியாக போன் செய்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக் கிறார்கள். அவர் அதிக சீட் வேண்டும் என த.வெ.க. கூட்டணியோடு பேசிவருகிறார். த.வெ.க. -ஓ.பி.எஸ். -சசிகலா -பா.ம.க. கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இவையனைத்தும் பா.ஜ.க.வின் கையில்தான் இருக்கிறது. பிரதமர் வந்துபோன பிறகு பா.ஜ.க. தனது அழுத்தத்தை அதிகரிக்கும். பா.ஜ.க.வின் அழுத்தம் அதிகரித்தால் அனைவரும் பா.ஜ.க.வை நோக்கி வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பே அதிகரித்துள்ளது.

த.வெ.க., கிடைத்ததை பற்றிக்கொள்வோம் என கூட்டணிக்கான காய்களை நகர்த்தி வருகிறது.

இப்படியாக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஆங்காங்கே குண்டுகள் வெடித்தபடி இருக்கின்றன.


படங்கள் : எஸ்.பி. சுந்தர்